அரசு போக்குவரத்துக் கழக ஏ. ஐ .டி .யூ. சி. சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
மணப்பாறை அரசு போக்குவரத்துக் கழக ஏ. ஐ .டி .யூ. சி. சங்க ஆண்டு பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு
மணப்பாறை நவ. 4 மணப்பாறை கோவில்பட்டி சாலையில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள கே டி கே தங்கமணி கூட்ட அரங்கில் இயங்கும் ரவிசந்திரன் நினைவு அரங்கில் அரசு போக்குவரத்துக் கழக ஏ ஐ டி யு சி மணப்பாறை கிளை ஆண்டு பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றதுஇப்பேரவைக்கு கண்ணன் தலைமை வகித்தார் வேலை அறிக்கையை செயலாளர் வைத்தார் வரவு செலவு அறிக்கை பொருளாளர் வைத்தார் இவ்விரு அறிக்கை மீது விவாததிற்குக்கு பின் ஏக மனதாக ஏற்கப்பட்டது பேரவையை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் துவரங்குறிச்சி கிளை அரசு போக்குவரத்துக் கழக ஏ ஐ டி யு சி கிளை தலைவர் ஆறுமுகம் ஒய்வுபெறோர் சங்க நிர்வாகிகள் குமரசங்கு செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி உரை நிகழ்தினார்கள்
புதிய நிர்வாகிகள்
தலைவர் சரவணண், துணைத் தலைவர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி , முத்துச்சாமி , ஸ்டாலின், வேளங்கண்ணி, தனிஸ்லாஸ் ஆகியோரும் செயலாளர் மாசிமலை, துணைச் செயலாளர்கள் காளிதாஸ், ராமசாமி, அர்ஜூணன், அன்பழகன், சங்கர், பொருளாளர் கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தங்கவேல், முருகேசன், முருகேசன், கண்ணுச்சாமி தனபால் வடிவேல் இராஜேந்திரனும் தகவல் மற்றும் செய்தி தொடர்பாளராக தெய்வேந்திரனும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்
புதிய நிர்வாகிகளை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில முன்னாள் நிர்வாககுழு உறுப்பினர் இந்திரஜித் அரசு போக்குவரத்துக் கழக ஏ ஐ டி யு சி மாநில துணைப் பொது செயலாளர் சுப்பிரமணியன் மாநில பொருளாளர் நேருதுரை ஆகியோர்உரையாற்றினார்கள்.