மணப்பாறை அருகே கூலித்தொழிலாளி கொடூரமாக வெட்டிக் கொலை
மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தாள குளத்துப்பட்டி கூலித் தொழிலாளி ந.தங்கபாண்டியன் (35) இருவருக்கும் அருகே உள்ள அனியாப்பூர் சந்தைப்பேட்டை பகுதி போதும் பொன்னுக்கும் (22)திருமணம் ஆகி 3வயதில் பெண் குழந்தையும், 1வயதில் ஆண் குழந்தையும் உள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் போதும் பொண்ணு தனது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டு வாசலில் கயிற்று கட்டிலில். படுத்திருந்த தங்கபாண்டியன் 8 இடங்களில் வெட்டி கொல்லப்பட்டு கிடந்தார் .தகவல் அறிந்து சென்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான வையம்பட்டி போலீசார் தங்கபாண்டியன் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.