மலைவாழ் மக்களுக்கு அரசின் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு வழங்கல்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
மலைவாழ் மக்களுக்கு அரசின் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவை
ஒன்றிய ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகிழம்பாடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் அரசின் மூலம் வீடுகள் கட்ட உத்தரவு ஆணைகளை ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
லால்குடி அருகே மகிழம்பாடி ஊராட்சியில் இருளர்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் பழங்குடி மக்களான இருளர்கள் தாங்கள் குடியிருக்க வீடு ஒதுக்கி தர வேண்டுமென லால்குடி செளந்தர பாண்டியன் எம்எல் வழியாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற அமைச்சர் கே என் நேரு பழங்குடியின மக்களின் 11 குடும்பங்களுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை சார்பில் 11 வீடுகள் ஒதுக்க ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்து தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ 48 லட்சத்து 70000 நிதி ஒதுக்கீடு செய்து 11 பயனாளிகள் வீடுகள் கட்ட அனுமதி வழங்கும் நிகழ்ச்சி லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி வீடு கட்டும் அனுமதி ஆணையை 11 பயனாளிகளுக்கு வழங்கினார். லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் , வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மகிழம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் ஒன்றி
ய கவுன்சிலர்கள் நிவாஸ் பிச்சைமணி, ஊராட்சி ஒன்றிய அலுவலக மேனேஜர் மரகத மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.