மண்ணச்சநல்லூரில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது
மண்ணச்சநல்லூர் பகுதியில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்தனர்.
திருச்சி, ஆக.21 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அதிகமாக வாகன திருட்டுகள் நடைபெற்று வருவதாக காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தது. இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராமன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நிஜாமுதீன் மற்றும் காவலர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பைக் திருட்டு வழக்குகளில் ஏற்கனவே சிக்கியவர்களையும் போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி மணச்சநல்லூர் வடக்கு ஏரி மிஷின் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டிவி.எஸ். எக்ஸ்.எல். வாகனத்தையும் மற்றும் 14 ஆம் தேதி உளுந்தங்குடி கிராமத்தை கமல் என்பவர் பூனாம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார் அப்பொழுது அவருடைய ஹீரோ ஹோண்டா பை திருடுபோய் உள்ளது. இது குறித்து இருவரும் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .
புகாரியின் அடிப்படையில் மணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவியை தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இதையடுத்து மண்ணச்சநல்லூரில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்த பொழுது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தது போலீசாருக்கு சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்தது. உடனடியாக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் துறையூர் நாகம நாயகன்பட்டி ராஜா(32) என்பதும் மேலும் சமீபத்தில் இருசக்கர வாகனங்களை திருடியது அவர் தான் என தெரியவந்தது. இதையடுத்து ராஜா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.