அழிந்து வரும் குதிரை ஏற்ற கலையை மீட்டெடுக்க புது முயற்சி
திருச்சி, ஜூலை 29 மணப்பாறையில் அழிந்து வரும் குதிரை ஏற்ற கலையை மீட்டெடுக்க புது முயற்சி. நாகரீக மோகத்தில் வளர்ந்து வரும் உலகில் விதவிதமான வாகனங்கள் சாலையில் அணிவகுக்க ஆரம்பத்தில் இருந்து குதிரை வண்டிகளை காண்பதும், குதிரையில் அமர்ந்து செல்வதையும் பார்ப்பது அரிதாகிப் போனது.
இந்நிலையில் தான் அழிந்து வரும் குதிரை ஏற்ற கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இலவச குதிரை ஏற்றப் பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ- மாணவிகள் ஆர்வலமாக கலந்து கொண்டு குதிரையில் எப்படி ஏற வேண்டும், அதில் அமர்ந்து எப்படி சவாரி செய்ய வேண்டும், குதிரையை எப்படி ஓட்ட வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் 8 போன்ற வடிவிலும், பல்வேறு நிலைகளிலும் குதிரையில் அமர்ந்து பயிற்சி பெற்றனர். பின்னர் பயிற்சி முடித்த மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.