பழைமையான கோவிலில் வழக்கமான முறையை தந்திடக்கோரி  மனு

0 297
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்முச்சந்தி அருகே அந்தாள ஈஸ்வரி உடனுறை திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது. பூர்வத்தி கோவில் என்றழைக்கப்படும் இந்த ஆலயம் மிகவும் பழைமையான ஆலயம் என்ற நிலையில் தற்போது அதற்கு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குட்டியபட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களுக்கும் கோவிலில் வழக்கமான முறையை வழங்கிட வேண்டும், ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் குட்டியபட்டி குறித்த பெயர் இல்லாதததோடு குட்டியபட்டியில் தான் சாமி அம்பு எறிதல் விழாவும் நடக்கும் என்பதுடன் 4 வது நாள் நிகழ்வு குட்டியபட்டிக்கு தான் வழங்கப்படும்.

ஆனால் அதுபோன்ற எந்தநடைமுறையும் இந்த முறை இல்லாமல் இருப்பதால் எங்கள் ஊரை வழக்கமான கோவில் நடைமுறைகள் வழங்கிட வேண்டும் என்று கூறி மக்கள் கோவில் செயல் அலுவலரிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.