தெப்பக்குளத்தை சுற்றி பொழுது போக்கு பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் : மாநகராட்சி ஆணையர் பேட்டி

0 30
Stalin trichy visit

திருச்சி, மே 15  திருச்சி தெப்பக்குளத்தை சுற்றி பொழுது போக்கு பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் : மாநகராட்சி ஆணையர் பேட்டி

திருச்சிக்கு அடையாளமாக விளங்கும் அறநிலைத்துறைக்கு சொந்தமான மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பக்குளம் தூய்மைப்படுத்தி, அழகு படுத்தி அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து தொடர்ந்து தெப்பக்குளம் சுற்றியுள்ள கடைகனை நீதிமன்றம் உத்தரவு மூலமாக அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்று அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீர் முழுவதும் அகற்றப்பட்டு 30 வருடத்திற்கு பின்பு தெப்பக்குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை மாநகராட்சி ஆணையர் மதுபாலா தலைமையில்
துவங்கியது.

தெப்பக்குளத்தில் மொத்த பரப்பளவு 20984 சதுர மீட்டர் மற்றும் 3.50 மீட்டர் ஆழமாகவும்,சுமார் 73.44 கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக தெப்பக்குளம் உள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு, மலைக்கோட்டை கோவில் சார்பில் அதிகாரிகள், அறங்காவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பணிக்கு வணிகர் சங்கத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.25லட்சத்தை வணிகர் சங்க மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு மாநகராட்சி ஆணையர் மதுபாலனிடம் வழங்கினார்.

தொடர்ந்து தூர் வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு தெப்பக்குளம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை அமைக்கும் பணிகளும், மாலை வேலைகளில் பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் பூங்காக்கள் ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ள இருப்பதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலா தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.