சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை

0 296
Stalin trichy visit

திருச்சி, ஆக.21 தமிழகத்தின் இரும்புபெண்மணியான, மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடுஅழைக்கப்படும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா  நிழலாக இறுதிவரை இருந்தவர் சசிகலா.

தொடர் தோல்விகளால் துவண்டுபோய் உள்ள அதிமுக தொண்டர்களையும், பலரின் சுயநலத்தால் சுக்குநூறாக உடைந்துபோன அதிமுகவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டு உள்ளார்.

தமிழக அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக விளங்குபவரும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் சின்னம்மா என்றும் ராஜாமாதா என போற்றப்படும் சசிகலா  70ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர் அதிமுக முன்னாள் மாநகராட்சி மக்கள்நல கண்காணிப்புகுழு உறுப்பினர் ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டின்பேரில், திருச்சி மாநகர், முடுக்குதெரு, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்புபூஜை நடைபெற்றது.

முத்துமாரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

இதில் திரளான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.