கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் : அமைச்சர் அன்பில் மகேஸ்

0 233
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் மணப்பாறையில் உள்ள கலைஞர் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கிய அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பை கண்டித்து அதிமுக சார்பில் 24 ஆம் தேதி மதுரையில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லா துறை சார்ந்து இருக்கின்ற பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று 2023 – 24 ம் ஆண்டு அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்தவர்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு வந்த பின் அதற்கு தனி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து இருக்கின்ற அமைச்சர்கள் கருத்துக்களை என்னிடம் வழங்கினார். அதுகுறித்த அறிக்கை உள்ளது. ஆனால் அதுகுறித்து எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை. பல அமைப்புக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதையெல்லாம் தொகுத்து முதல்வரிடம் கொடுத்துள்ளோம். இறுதியாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்கள். ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போரட்டம் நடத்தலாம். ஆனால் எந்தமுடிவும் எடுக்கப்படாத நிலையில் வியூகத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது எந்தவிதத்திலும் சரியானது அல்ல.

கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் முடிவெடுத்த பின் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாமே தவிர யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து.

இதே போல் அரசு பள்ளிகளில் உள்ள ஐடெக் லேப்களில் தனியாக ஆசிரியர் தேவை என்பதை நானும் உறுதி செய்கிறேன் என்று கூறினார். 3 ஆண்டுகளில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுப்பதுடன் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தருவேன் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள். இதில் எதிர் கட்சித் தலைவர் எந்த குரலும் கொடுக்காத நிலையில் இறுதி முடிவு எடுக்காத ஒரு விஷயத்திற்கு போராட்டம் என்பது 2026 ம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இப்போதே அரசியல் செய்ய நினைக்கிறார். ஆர்ப்பாட்டம் – பேராட்டத்தை கைவிடுங்கள். தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.