தனியார் ஆம்னி பஸ்ஸில் திடீர் தீவிபத்து
திருச்சி, ஆக.23 நெல்லை மாவட்டம் அருகே திசையன்விளையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் 27 பேர் பயணம் செய்துள்ளனர். திருச்சி மன்னார்புரம் பகுதியில் வந்த போது பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த பஸ்சில் திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து டீசல் டேங்க் கசிவு ஏற்பட்டதால் அந்த பஸ் தீ பிடித்து எரியத் துவங்கியது. நள்ளிரவு நேரமாக இருந்ததால் தூக்கத்தில் இருந்த பயணிகள் என்னவோ ஏதோ ஒன்று அலறி அடித்து பஸ்சிலிருந்து வெளியேற முயன்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் சசம்பவ இடத்துக்கு சென்று, பஸ்சுக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு தீயை அணைத்தனர். பயணியர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் பஸ் முழுமையாக எரிந்து சேதமடைந்தது.