லால்குடி அருகே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரை பாலம்
லால்குடி அருகே தற்காலிக தரை பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் ஊராட்சி மற்றும் மகிழம்பாடி ஊராட்சி இடைப்பட்ட பகுதியில் உள்ள உப்பாறு குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் சேதம் அடைந்ததால் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .
இதனால் அப்பகுதி மக்கள் உப்பாறை கடந்து செல்ல புதிய தற்காலிக தரைப்பாலம் அமைத்தனர் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கன மழையினால் தற்காலிக தரைப்பாலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.