தெய்வத்திற்கும் மேலானவர்கள் – இது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கூறும் வாழ்த்து தொகுப்பு!
“மாதா பிதா குரு தெய்வம்” என்பார்கள். தெய்வத்திற்கு ஒரு படி முன்பாக ஆசிரியரை, குருவை போற்றியது நம்முடைய தமிழர் பண்பாடு. பள்ளி ஒரு தோட்டம். அங்கு பயில்வோர் அதன் செடிகள். ஆசிரியர் அங்கே தோட்டக்காரர். சமூகப் படிநிலையில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் ஒரு மாணவன் அவனின் ஆசிரியருக்கு மாணவனே!
ஆம், “இன்று ஆசிரியர் தினம்”. மழலையர் பள்ளி முதல் மாண்பமை பல்கலைக்கழகம் வரை எங்கு, எந்தப் பணிச்சூழலில் ஆசிரியராகப் பணியாற்றினாலும் ஒருவர் ஆசிரியரே. ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர், பயிற்றுநர், போதகர் எனப் பல பெயர் தாங்கி வந்தாலும் அவர் ஆசிரியர் என்ற பொதுச் சொல்லில் அங்கமாகி விடுவார்.
இந்த இக்கட்டான காலகட்டத்திலும் பல தடைகளையும் சவால்களையும் எதிர்த்து மாணவர்களுக்கு கல்வி என்னும் அறிவை போதிப்பதற்காக கடந்த சில வருடங்களாக ஆசிரியர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல…. பள்ளியையும் கல்லூரியையும் கடந்த சில நாட்களாக இழந்து தவித்தாலும் தன்னுடைய கனவை நிறைவேற்றுவதற்கு ஆக ஆசிரியர்கள் பின்புறமிருந்து தங்களால் முடிந்த உதவியை ஒருநாளும் செய்யத் தவறியதில்லை…
இன்றைய ஆசிரியர் தினவிழாவில் தேசிய கல்லூரி மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு வாழ்த்துக் கூறும் செய்தித் தொகுப்பினை வெளியிடுகிறது திருச்சி மெயில் இணையதளம்….
“இந்தப் பிறவியில் ஆசிரியரைப் போல இன்னொருவர் கிடைக்கப்போவதில்லை”

மணிகண்டன்
BSc, வேதியியல்
தேசிய கல்லூரி
“மாணவர்களின் அறிவை திறந்து அவர்களுடைய வாழ்க்கைக்கு வெளிச்சம் தருவது ஆசிரியர்கள்தான். இந்தப் பிறவியிலேயே ஆசிரியரை போல இன்னொருவர் கிடைக்கப்போவதில்லை. ஆசிரியர்களை தெய்வத்திற்கு இணையாக போற்ற வேண்டும். நம்ம லைஃப்ல மிகவும் முக்கியமானவர்கள் ஆசிரியர்கள்தான். கல்லூரி மற்றும் பள்ளி என அனைத்திலும் ஆசிரியர்களை யூஸ் பண்ணால் மட்டுமே லைஃப் நன்றாக இருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைப் படி நடந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்”
“அப்பா அம்மாவுக்கு அடுத்த அவங்கதான்’

கிஷோர்
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
தேசிய கல்லூரி
“டீச்சர்ஸ் எல்லாமே எனக்கு நல்ல ஒரு பிரண்ட்ஸ் இருக்காங்க. நல்ல வழிகாட்டியாக இருக்காங்க. எங்க அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியா அவங்க தான். எந்த ஒரு கஷ்டம் நாளும் அவங்ககிட்ட ஆலோசனை பெற்றால் அதற்கு ஏற்ற மாதிரி செய்யுங்க என ஆலோசனை தருவார்கள். அப்பா அம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதேபோல தான் ஆசிரியர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். எனவே இந்த ஆசிரியர் தினம் கொண்டாடப்பட வேண்டும்.
“பேரன்ஸ் சப்போர்ட் இல்லனா கூட டீச்சர்ஸ் சப்போர்ட் அதிகமாக இருக்கும்”

சாய் ஸ்ரீ கணேஷ்
BSc, தாவரவியல்
தேசிய கல்லூரி
“கண்டிப்பா டீச்சர்ஸ் டே கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள். நமக்கு பேரன்ஸ் சப்போர்ட் பண்ணல நான் கூட, டீச்சர்ஸ் நமக்கு அவ்வளவு சப்போர்ட் பண்றாங்க. இப்போ ஒலிம்பிக்கில் கூட நிறைய பேர் தங்க வாங்கி இருக்காங்க. அவங்களுக்கு பேரன்ஸ் சப்போர்ட் இருந்தாலும் கூட, அந்த டீச்சர்ஸ், பயிற்சியாளர்கள் சப்போர்ட்னால தான், அவர்கள் அவ்வளவு தூரம் கொண்டு போய் இருக்கு. நான் இங்கு பாட்னி படிப்பதற்கு என்னுடைய பள்ளியில் பாட ஆசிரியர் பாலமுருகன் சாருடைய ஊக்கத்தினால் சப்ஜெக்ட் மேல ஆர்வம் வந்தது. ஏன் நானும் கூட ஒரு ஆசிரியர் ஆவதுதான் என்னுடைய கனவு.
“அவங்க இல்லாம எல்.கே.ஜி-ல இருந்து பிஜி வந்திருக்க முடியாது”

பாலகிருஷ்ணன்
MSc, கம்ப்யூட்டர் சயின்ஸ்
தேசிய கல்லூரி
எல்.கே.ஜி ல இருந்து இன்னைக்கு பி.ஜி வர வந்துட்டோம். அவங்க இல்லாம நம்ம வந்து இருக்க முடியாது. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு வருத்தம். இல்லன்னா மத்த நாளா இருந்தா சூப்பரா கொண்டாடியிருக்கலாம். நான் நேஷனல் காலேஜ் காலேஜ் படிக்கும்போது சத்தியா மேம் தான் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. எல்லாருக்கும் ஹாப்பி டீச்சர்ஸ் டே.
“நாம நல்ல நிலைமைக்கு போறதுக்கு அவங்க தான் காரணம்”

யுவராஜ்
BCA, தேசிய கல்லூரி
நாம ஒரு நல்ல நிலைமைக்கு போறதுக்கு அவங்க ஒரு முக்கியமான காரணமா இருக்காங்க. அவங்களுக்கு இந்த நாளை கொண்டாடி ஆகணும். நம்ம லைஃப்ல நெக்ஸ்ட் பார்ட் அவ்வங்களா தான் இருப்பாங்க. நான் ஒரு நல்ல நிலைமைக்கு போனாலும் அதுக்கு அவங்களும் ஒரு முக்கியமான காரணமா இருப்பாங்க.
“ஒவ்வொரு மனிதனையும் உருவாக்குவது டீச்சர்ஸ் தான்”

பூவன்ணன்.மு
பயோ டெக்னாலஜி
தேசிய கல்லூரி
“உலகத்திலேயே பெரிய தினமாக கொண்டாடப்பட வேண்டிய தினம் டீச்சர்ஸ் டே. ஒவ்வொரு மனிதனையும் உருவாக்குவது ஒரு ஆசிரியர்தான். ஒரு மனிதன் வளர்வது பேரன்ஸ் கையில இருந்தாலும் அதுக்கு அப்புறம் எல்லாமே டீச்சர்ஸ் கைல தான் இருக்கு. ஒருவன் நல்லவனாகவும் , கெட்டவனாகவும் அதுவும் ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் தனித்தனியாக பேசும்போது அவர்களை நாம் நல்ல முறையில் உபயோகப்படுத்த கொள்ள வேண்டும்” என்றார்
“ஆசிரியருக்கு கண்டிப்பா நிறைய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்”

ஷன்மதி
பயோ டெக்னாலஜி
தேசிய கல்லூரி
ஆசிரியரை கண்டிப்பா நிறைய முக்கியத்துவம் கொடுக்கணும். வருடம் முழுவதும் அவங்க ஓடிக்கிட்டு இருக்காங்க. அந்த ஒரு நாள் மட்டும் தான் அவர்களுக்காக மாணவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டாடுறோம். நான் பள்ளி படிக்கும்போது ராஜா சார் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச சார். அவரால்தான் இன்ஸ்பயர் ஆகி நான் படிச்சிட்டு இருக்கேன்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA