திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 8 பிளாட்பாரங்கள் உள்ளன. தினமும் பல்வேறு மாநிலங்களில் மாவட்டங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சி ஜங்ஷன் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பிளாட்பாரங்களில் நடைமேம்பாலம் இன்றியும், சுரங்கப்பாதை இருந்து வந்தது. சுரங்கப்பாதை வழியாக இறங்கி சென்று மீண்டும் பிளாட்பாரங்களில் படிக்கட்டுகளில் ஏற வேண்டும். இதனால் வயதானவர்கள் 3, 4, 5, 6, 7 போன்ற பிளாட்பாரங்களில் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதனால் எம்.பி சிவா ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதற்காக தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து நிதி ஒதுக்குவதாக கூறி அதற்காக ஒரு கோடியை முறைப்படி கலெக்டர் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது பிளாட்பாரங்களில் இடையே எஸ்கலேட்டர் அமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 பிளாட்பாரங்களில் உட்பட அனைத்திலும் பார்சல் அலுவலகம் அருகே இருந்து நடைமேம்பாலம் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.