கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

0 132
Stalin trichy visit

திருச்சி, அக்.27  கொலை வழக்கில்  கைது செய்யப்பட்ட மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா ஆழத்துடையான் பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் தனது மனைவி மாதவி வீடான தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்தில் வசித்து வந்தார்.இந்நிலையில் முன்விரோதம் காரணமாக 2. 9 .2025 அன்று இரவு ஏழு மணி அளவில் முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகில் ஆலத்துடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்பேஷ் (35) ,அஸ்வின் குமார் என்கின்ற படையப்பா (26) ,ஆகியோரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக சஞ்சீவி நாதன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி வழக்கில் தொடர்புடைய ஆலத்துடையான் பட்டி கவியரசன், அழகரை (32) ,மருதுபாண்டி (19)பிரவீன் என்கின்ற முகமது (31), முள்ளிப்பாடி காலனி பரமேஸ்வரன் (26)ஆகியோரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்து வரும் கல்பேஷ், அஸ்வின் குமார், என்கின்ற படையப்பா கவியரசன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் குண்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று சிறையில் இருந்த மூன்று பேரிடமும் உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் தற்போது வரை மொத்தம் 91 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.