எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் “நீங்கள் விரும்பும் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள்” கருத்தரங்கம்

0 153
Stalin trichy visit

திருச்சி, அக்.27  திருச்சி கல்லூரியில் நீங்கள் விரும்பும் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள் தலைப்பில் கருத்தரங்கம் – பேராசிரியர்கள் மாணவ – மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்பு

திருச்சி குண்டூரில் உள்ள எம் ஐ இ டி பொறியியல் கல்லூரியில் “தொழில் தயார்நிலை 2030 நீங்கள் விரும்பும் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் செயலாளர் மற்றும் தாளாளர் முகமதுயூனுஸ் தலைமையில் மனிதவள மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தி ரைஸ் குளோபல் அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜெகத் கஸ்பர்ராஜ், ப்பால் நிறுவனத்தின் மண்டல மனிதவள விற்பனை பங்குதாரர் முனைவர் ரத்தினவேல்ராஜன், கிஸ்லென் நிறுவனத்தின் தலைமை மனிதவளப்பிரிவு சாஜ், டான்கேம் துணைத் தலைவர் தென்றல்ராஜேந்திரன், UNO மின்டா நிறுவனத்தின் மண்டல தலைமை மனிதவளப்பிரிவு சந்திரமோகன், வெர்னெட் டெக்னாலஜி பூனா மற்றும் சென்னை பிரிவின் தலைமை மனிதவள மற்றும் இயக்கம் ஜூலிகிருபாவதி, டோஸ்ட் மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் பி 4 இயக்குனர் அருள்மொழிவில்லாளன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்கால நோக்கம், செயல்பாடுகள் குறித்து கருத்துரையை வழங்கினர்.

இந்நிகழ்வில் முதல்வர் நவீன்சேட், துணை முதல்வர் முகமது அப்துல்ஜலில், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்
திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.