சொந்த மாமியாரை தோற்கடிக்க சதி வேலை செய்கிறார் ஆதவ் அர்ஜுனா : ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு

0 14
Stalin trichy visit

திருச்சி, ஏப். 18  லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில்,

புதுச்சேரியில் இருந்து எங்களுடைய உறவினர்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்காக வருகை தந்து மீண்டும் லால்குடிக்கு வந்து கொண்டு இருந்தபோது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அவர்களை வழிமறித்து வாக்குக்கு பணம் கொடுக்க வந்ததாக தவறான கருத்துக்களை தெரிவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் சம்பவ இடத்தில் இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் லால்குடி வேட்பாளர் கூபா கிருஷ்ணன் தூண்டுதலின் பெயரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தன்னுடைய உறவினர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தூண்டுதலின் பெயரில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக சந்தேகம் எழுகிறது இது குறித்து விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25 ஆயிரம் ரூபாய் வாக்குக்கு டோக்கன் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது ஒரு சாதாரண மனிதனுக்கு கூட தெரியும் 25 ஆயிரம் ரூபாய் எப்படி கொடுக்க முடியும். அடிப்படை ஆதாரம் இல்லாமல் சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடுகின்றனர் அது முற்றிலும் தவறானது என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.