பெல் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப். 18 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக) வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெல் (BHEL) பாய்லர் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சுமார் 6,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் பெல் தொழிற்சாலையின் இரண்டாம் நுழைவு வாயிலில் , மாலை பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, காலை நேரப் பணி முடிந்து வெளியே வந்த தொழிலாளர்கள் மற்றும் இரவு நேரப் பணிக்குச் சென்ற தொழிலாளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தொழிலாளர்கள் நீங்களும் உங்கள் உறவினர்களும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மனதில் கொண்டு, உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.”
பெல் பொதுச் செயலாளர் தீபன், கணேஷ் குமார், பரமேஸ்வரன் மற்றும் பெல் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்