அறநிலைத்துறையினர் குளறுபடியால் கோவில் நிலம் ஏலம் ஒத்திவைப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொப்பம்பட்டிபகுதியில் அமைந்துள்ளசப்த்தரிஸிஸ்வரர்சிவன் கோவிலுக்கு சொந்தமான34 ஏக்கர் விவசாயநிலம்இன்று பொது ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அந்த நிலங்களில் விவசாயம்பார்த்து வரும்விவசாயிகள் மீண்டும் குத்தகை எடுப்பதற்காக ஒப்பந்த தொகையை செலுத்தியதாகதெரிகிறது,ஆனால் கோயில்நிர்வாகம்அவர்களுக்கு முறையான அறிவிப்பு வழங்காமல் ஏலம்விடுவதற்கு அறநிலையத்துறையினர் முடிவு செய்துள்ளனர் இதனை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்திடீரென கோவில்முன்புதிரண்டனர், மேலும் தாங்கள் மூன்று தலைமுறைகளாக விவசாயம்செய்துவருவதாகவும் தங்களுக்கு கூறாமல் ஏலம் விடுவது முறை அல்ல எனகூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனை தொடர்ந்து அறநிலையத்துறையினருக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டதாக அறநிலையத்துறையினர் அறிவித்துள்ளனர் இதனால் கொப்பம்பட்டி பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது