இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது
திருச்சி, செப். 2 திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லை, திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்.9487464651-ற்கு கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து, சமூக வலைத்தளங்களை சோதனை செய்த போது, அதில் திருச்சி மாவட்டம், குண்டூர், வடக்கு தெருவை சேர்ந்த குமரகுரு என்பவரது மகன் சச்சின்(18) என்பவர் மேற்படி மாத்தூர் பகுதியில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து, அலட்சியமாக ஓட்டிச் சென்றும், அதனை வீடியோ காட்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து, மேற்படி நபர் மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மேற்படி சச்சினை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையபான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.