தட்டுப்பாடு தொடர்வதால் ஆவின் பால் நிறுவனம் முன் போராட்டம் நடத்த முகவர்கள் முடிவு
திருச்சி, ஆக.10 திருச்சியில் கடந்த 20 நாட்க ளுக்கும் மேலாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முகவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் பாலின் அளவு குறைக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் தங்களது வாடிக் கையாளர்கள் கேட்கும் அள
விற்கு பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய முடியா மல் தவித்து வருகிறார்கள்.
இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி கடந்த மாதம் 27-ந்தேதி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் வர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனுகொடுத்த னர். ஆனாலும் இன்னும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தட்டுப்பாடு நிலை நீடித்து வருகிறது
ஆவின் அதிகாரிகள் இந்த பிரச்சினையில் மாநில அள வில் உள்ள அதிகாரிகள் தான் பேச்சுவார்த்தை நடத்தி வேண்டும் என்று கூறி வருகி றார்கள். ஆவின் பால் தட்டுப் பாடு பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக திருச்சி மாவட்ட ஆவின் பால் நிறுவனம் முன் பாக போராட்டம் நடத்த முகவர்கள் முடிவு செய்துள்ளனர்.