சீரமைப்பு பணிகள் நிறைவு : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு கோபுர நுழைவுவாயில் திறப்பு

0 20
Stalin trichy visit

திருச்சி, ஆக.10  சீரமைப்பு பணிக்காக 3 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு கோபுர நுழைவுவாயில்திறப்பு

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். இந்த கோவிலின் கிழக்குநுழைவுவாயிலில் உள்ள தாமோதர கிருஷ் ணன் கோவில் கோபுரத்தின் ஒரு பகுதி (கொடுங்கை எனப் படும் வளைவுப்பகுதி) கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதி மக் கள் மற்றும் பக்தர்கள் கிழக்குவாசல் கோபு ரத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்த னர்.அதன்படி பழமை மாறாமல் சிற்ப வல்லுனர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட குழுவின் வழிகாட்டுத லின் படி புனரமைப் புப் பணிகள் தொடங் கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்றது. இந்த கோபுர வாயில் 3 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பூஜை கள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கோபுரத்தின் நுழைவுவாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், மாநக ராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.