மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்: சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அறிவிப்பு

0 167
Stalin trichy visit

கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்
அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் இன்று மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், உடனடியாக ஓய்வூதியத்தை உயர்த்துவது, அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், குடும்ப நலநிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 11-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, டிசம்பர் 10-ந் தேதி சென்னை மாநகரில் மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாநில பொருளாளர் ராமநாதன், மாநில துணைத்தலைவர்கள் ஆண்டாள், சத்தி, தாண்டவமூர்த்தி, ராமசுப்புராஜ், சித்திரச்செல்வி, கிரேஸ் சசிகலா, அய்யங்காளை,
மாநிலச் செயலாளர்கள் ராஜேந்திரன், விஜயகுமார், பாண்டி, சுந்தரம்மாள். சுப்பிரமணியன், சூரியமூர்த்தி, சேஷாம்பா,
மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் ஜெயராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.