திருச்சியில் நாளை அக்னி வீரர்கள் ஆட் சேர்ப்பு முகாம்
திருச்சியில் நாளை அக்னி வீரர்கள் சேர்ப்பு முகாம் 16 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
திருச்சி, நவ. 12 திருச்சியில் நாளை அக்னி வீரர்கள் திட்டத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 16மாவட்ட இளைஞர்கள், பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது.
இதுதொடர்பாக திருச்சி மண்டல ராணுவ ஆள் சேர்ப்பு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராணுவம், கடற் படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய் யும் அக்னி பாதை என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டப்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம். இவர் கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர்.
இத்திட்டத்தில் இணையும் வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். பிறகு வீரர்களின் பங்களிப்பு தொகை ரூ. 5.02 லட்சம், அரசு அளிக்கும் அதே தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இத்தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். பணிக் காலத்தில் ரூ. 48 லட் சத்துக்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படும். நடப்பாண்டில் 40,000 பேருக்கு ராணுவத்தில் வேலை தரப்படுகிறது. இத்திட்டப்படி தமிழகத்தில் ஆள் சேர்ப்புப் பணி நடைபெறுகிறது. திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை , திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடு துறை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு திருச்சி-திண்டுக்கல் நெடுஞ் சாலையில் உள்ள தேசியக் கல்லூரியில் நாளை நடை பெறும்.
அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் கிளார்க், ஸ்டோர் கீப்பர், அக்னி வீரர் ஜெனரல் பணி மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்க ளுக்குத் தேர்வு நடைபெறும். விருப்பமும், தகுதியுடையுமுடையோர் நாளை ( 13ஆம் தேதி) அதிகாலை 4 மணிக்கு முன்னதாக தகவல் தெரிவித்துப் பங்கேற்கலாம். அனைத்து இளைஞர்களும் அதிகாலை 4 மணிக்கு தேசியக் கல்லூரிமைதானத்தில் ஆஜராக வேண்டியது அவசியம்.