கல்லூர் – அய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகிலுள்ள கல்லூர் அய்யாற்றில் நீர்வரத்து 9000 கன அடியாக அதிகரித்துள்ளத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், கண்காணிப்புடன் பணியாற்றிடவும் அலுவர்களுக்கு உத்தரவிட்டார். உடன் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் உள்ளனர்.