புள்ளம்பாடியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

0 221
Stalin trichy visit

திருச்சி, பிப். 25 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதி ஆண்டு வேளாண்மை மாணவர்கள் சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்தனர்.

புள்ளம்பாடி பகுதியில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திரளாக கலந்து கொண்டனர். சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் பயன்படுத்துவதின் அவசியம், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கும் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதல் உதவி நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு துறையின் அவசர உதவி எண் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. மாணவர்கள் பொதுமக்களுடன் கலந்துரையாடி, சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியையும் ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.