வாளாடியில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர் மூலம் வேளாண் கண்காட்சி
திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், வாளாடி கிராமத்தில் இன்று நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் மூலம் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. இந்த வேளாண் கண்காட்சியில் நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் காய்கறி தோட்டம் அமைத்தல், புவி வெப்ப ஆற்றல் மூலம் மாட்டுப் பண்ணையை மிதமான வெப்ப நிலையில் பராமரித்தல், பசுமை குடில் வகைகள், ஹைட்ரோபோனிக்ஸ், உள்நாட்டு பாரம்பரிய முறைகள், ஒலி ஏற்படுத்துவதன் மூலம் வயல்களில் பறவைகள் மற்றும் விலங்குகளை கட்டுப்படுத்துதல், பாரம்பரிய நெல் வகைகள், உயிரி உரங்கள் காட்டு பன்றி விரட்டி தொழில்நுட்பம், பஞ்சகாவியம், தசக்காவ்யா, மீன் அமிலம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மூலிகை பூச்சி விரட்டி, ஐந்திலை கரைசல், இயற்கை விவசாயம், காண்டாமிருக இன கவர்ச்சி பொறி ஒளிப்பொறி, மற்றும் இதர இனக்கவர்ச்சி பொறி மற்றும் உள்நாட்டு பாரம்பரிய முறைகள் போன்ற 40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் விவசாய மக்களுக்கு தெளிவாக விளக்கமளித்தனர்.
இந்த வேளாண் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட வாளாடி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களையும் தங்களுக்கு தெரியாத தகவல்களையும் தெரிந்து பயன்பெற்றனர்.
இந்த வேளாண் கண்காட்சி நிகழ்ச்சியில் வாளாடி உழவன் ஜெகன் அவர்கள் சிறப்புரை வழங்கி நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.
இந்த வேளாண் கண்காட்சியினை நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா.சாம் குமார், ஜெ.சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர். ஜெ.வெங்கடா பிரபு, முனைவர்.பா.குணா இணைப் பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ப.நந்தகுமார் முதுநிலை உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ம.சுரேஷ் உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படிசிறப்பாக எடுத்து நடத்தினர்.