மணப்பாறையில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

0 337
Stalin trichy visit

திருச்சி, ஏப்.9  திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய  பகுதிகளில் திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருக்கு மகளிர் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசுகையில், செல்லும் கிரமங்களில் எல்லாம் சிறப்பான வகையில் மக்கள் வரவேற்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். வரவேற்பு கொடுத்திருக்கக்கூடிய தாய்மார்கள் அனைவரும் அதிமுகதான் வெற்றி பெற வேண்டும் முடிவு எடுத்து வந்துள்ளீர்கள் என்பதை பார்க்கும் போது தெரிகிறது.
2026 ல் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக தற்போது வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு உங்க பிள்ளையாக உங்கள் சகோதரனாக  இருக்கக்கூடிய எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நான் வெற்றி பெற்றவுடன்  இந்த பகுதியில் இருக்கிற அத்தனை குடிநீர் பிரச்சனைகளையும் நான் நிச்சயமாக சரி செய்து தருவேன் என வாக்குறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

சித்தாநத்தம் கிராமத்தில் பிரச்சாரத்தை துவக்கி கரையாம்பட்டி, கத்திக்காரன்பட்டி, சமுத்திரம், காந்திநகர், மறவனூர், இடையபட்டி, பெரியபட்டி, மொணாடிப்பட்டி உள்ளிட்ட‌ 35 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். சுற்றுப்பயணத்தில் வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி, முன்னாள் எம்.பி., குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இந்நிலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மாவட்ட கலை இலக்கியசெயலாளர் அன்னை கோபால் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.