வழக்கின் சமரச தீர்வுக்கு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஏப்.9 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தின் சார்பில் வழக்குகளில் சமரச தீர்வு காண்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மணப்பாறை பேருந்து நிலையம் அருகே இருந்து தொடங்கிய பேரணி மதுரை சாலையில் நிறைவு பெற்றது. இதில் மணப்பாறையில் உள்ள நீதிபதிகள் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பயிற்சி பெற்ற சமரசர்கள் உதவியுடன் விரைவாக இறுதியாக சுமூகத் தீர்வு காண வழக்கு தரப்பினர்கள் தங்கள் வழக்கை நீதிமன்ற சமரச மையத்திற்கு அனுப்ப முடிவும் அதன் மூலம் தீர்வு காண்பதும் குறித்து விழிப்புணர்வு பேரணியில் தெரிவித்தனர். இந்த நிலையில் வழக்கறிஞர் சங்கம் தலைவர் R.M.G. மோகன் தாஸ் செயலாளர் C.M.மகேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்று கலந்து கொண்டனர்