ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் மனோகரன் வாக்களித்தார்
திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சியில் மொத்தமாக 2 ஆயிரத்து 787 வாக்குச்சாவடி மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மய்யங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவான சூழல் அமைத்து தர தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டது. அதே போன்று வாக்குச்சாவடி மய்யத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்