தி.மு.க. ஐ.டி.விங் மீது மணப்பாறையில் டி.எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார்

0 255
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 20  அதிமுக பொதுச் செயலாலளரை தரக்குறைவாக விமர்சித்த தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மீது அதிமுகவினர் மணப்பாறை டி.எஸ்.பியிடம் புகார்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை தரக்குறைவாக விமர்சித்து கேலிச்சித்திரம் செய்த தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அதிமுகவினர் முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர், சின்னச்சாமி‌ தலைமையில் காவல் துணைகண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பியிடம் புகார் அளித்தனர். அப்போது தி.மு.க வை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து மனு அளித்து விட்டுச் சென்றனர்.

இதில் நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், சேது, முன்னாள் நகர் மன்ற தலைவர் சுதா பாஸ்கரன், நகர்மன்ற கவுன்சிலர்கள் சோனாஎத்திராஜ், கௌசிக், சர்மிளாசுரேஷ், தீபா ராஜா, முன்னாள் கவுன்சிலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.