அதிமுக திருச்சி மாவட்ட செயலர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின கீழ் வழக்குப்பதிவு

0 259
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 19  திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலர் ஜெ. சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ்   வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர அதிமுக காந்தி மார்க்கெட் முன்னாள் பகுதிச் செயலர் சுரேஷ் குப்தா. இவர், திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலர் ஜெ. சீனிவாசன், தன்னை ஜாதி பெயரைக் கூறி திட்டிய தாக அண்மையில் சென்னையில் உள்ள எஸ்.சி, எஸ்.டி ஆணையம் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். மேலும், தில்லைநகர் காவல் நிலையத்திலும் சுரேஷ் குப்தா புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் போலீஸார், ஜெ.சீனிவாசன் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்தனர். இதுதொ டர்பாக காவல் உதவி ஆணையர் தங்கபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.