காலிப்பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி மணப்பாறையில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்
திருச்சி,நவ. 21 மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏஐடியூசி சங்கம் மணப்பாறை கிளை.சார்பில் ஐந்து ஆண்டுகள் பணி புரிந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரையும் தேர்தல் வாக்குறுதிப்படி நிரந்தரம் செய்திட,மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள ஊதியத்தை வழங்கிடு! குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 42000 வழங்கிட அவுட்சோர்சிங் முறையை அமுல்படுத்தும் அரசானை 225-ஐ ரத்து செய்திட, நிரந்தர பணி இல்லை எனும் அரசாணை 181-ஐ ரத்து செய்திட, காலிப்பணியிடங்களை மக்கள் தொகை அடிப்படையில் நிரந்தர தன்மையுடன் நிரப்பிட, பயோ மெட்ரிக் கைரேகை முறையை கைவிட,தூய்மை பணியாளர் களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த, மழைக் கோட்டு மூன்று வருடத்திற்கு ஒரு முறை வழங்குவதை உடன் வழங்கிட,நகராட்சி தூய்மை பணி காலியிடங்களை நிரப்பிட இன் பால கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்
காளிமுத்து, கோட்டையம்மாள், செல்வம், நீலா, குமார், சாந்தி, லதா, தமிழரசன்,பாண்டித்துரை, ராஜபாண்டி, பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட துணை செயலாளர் ஜனசக்தி உசேன் ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் ராமலிங்கசாமி போக்குவரத்து கழக மண்டல பொது செயலாளர் சுந்தர்ராஜ் முன்னள் நகர் மன்ற உறுப்பினர் சௌக்கத்அலி வி.ச.ஒ.செயலாளர் ராஜேந்திரன்
சிபிஐ மருங்கபு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். நிறைவாக மாவட்ட துணை செயலாளர்
அருணகிரி நன்றி கூறினார்