மணப்பாறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, நவ.25 திருச்சி மாவட்டம், மணப்பாறை மதுரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு மேற்பார்வையாளர் பணியினை சீனியாரிட்டி அடிப்படையில் உள்ளூர் பணியாளர்களுக்கு வெளியூரில் இருந்து பணி நியமனம் செய்வதை கண்டித்தும், பணியாளர்கள் பணிபுரிய உகந்த வகையில் தரமான தளவாட சாமான்கள் வழங்கிட கோரியும், பணியாளர்களின் சம்பளத்தில் பிஎஃப் தொகையை இருப்பு விபரத்தை காட்டிடவும், ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதியே ஊதியம் வழங்கிட கோரியும், ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப்படி ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளித்திட நடவடிக்கை எடுக்கவும், அரசாணை எண் 672 தினக்கூலி 78 வழங்கியது. ஒப்பந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளத்தை வழங்கிடவும், மூன்றாண்டு பணி முடித்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்திடவும், ஒரே சம்பவம் தொடர்பாக நாலுமே நாலு பேர் பாதிக்கப்பட்டது. இரண்டு அலுவலர்களுக்கு ஒரு நீதி, 2 தொழிலாளர்களுக்கு ஒரு நீதி என்பதை கைவிடவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட பண பயன்களை வழங்கிடவும், குப்பைகள் கொட்டும் இடத்தை ஒவ்வொரு வார்டிலும் அடையாளம் காட்டவும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினரும், சங்கத்தின் கவுரவ தலைவருமான தங்கமணி தலைமை வகித்தார் பழனிச்சாமி, காமாட்சி,வேல்முருகன், கோட்டையாம்மாள், கணேசன் ,குமார் பிச்சை, அருணகிரி, செல்வம் ,தமிழரசன், ராஜேஸ், தங்கராசு ,காளியப்பன், சாந்தி ,மாரியப்பன், நல்லுச்சாமி, மூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மாவட்டத் துணைச் செயலாளர் ஜனசக்தி உசேன், மணப்பாறை கிளை கவுரவத் தலைவர் சௌகத் அலி, டி.என்.எஸ்.டி.சி. மண்டல தலைவர் சுந்தர்ராஜ், மணப்பாறை அமைப்புச்சார சங்க தலைவர் பழனிசாமி, பொது செயலாளர் நல்லுச்சாமி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.