சேற்றுக்குளத்தில் உற்சாக குளியல்போட்ட யானை அகிலா!

0 250
Stalin trichy visit

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் அகிலா என்ற யானை கடந்த 11 வருடங்களாக இறைப்பணி செய்து வருகிறது. யானை அகிலா குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் உள்ள நாச்சியார் தோப்பு பகுதியில் 20 அடி நீளம், 6 அடி அகலம்,

6 அடி ஆழத்தில் தடுப்புச் சுவர் கொண்ட குளியல் குளம் கடந்த ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் இந்து சமய அறநிலைத்துறை அறிவுறுத்தலின்படியும் கோவில் வளாகத்தில் ஏற்கனவே இருந்த வரும் நீச்சல் குளம் அருகில் யானை அகிலா சேற்றில்

குளிப்பதற்காக ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் 1200 சதுரடியில் சேற்றுக் குளியல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு களிமண் கொட்டப்பட்டு, 100 கிலோ உப்பு, நீர் சேர்க்கப்பட்டு சேறாக மாற்றப்பட்டது. பின்னர் யானை அகிலா அந்த சேற்று குளத்திற்குள்

இறக்கப்பட்டது. சேற்றுக்குளத்தை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்த யானை அகிலா சேற்றுக்குள் தனது துதிக்கையால் அடித்தும், புரண்டும், தன் மீது சேற்றை அள்ளி போட்டுக்கொண்டது விளையாடி மகிழ்ந்தது. இதனை பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.