முன்னாள் மாணவர்கள் மகா சந்திப்பு

0 264
Stalin trichy visit

திருச்சி,நவ.11  அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி செட்டிநாடு முன்னாள் மாணவர்கள் மகா சந்திப்பு மற்றும்  குடும்ப விழா மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.  இதில் . சாம்சன் ரிச்சர்ட் தலைவர் அருள்தாஸ், வரவேற்புரை ஆற்றினார். அண்ணாமலை பாலிடெக்னிக் முதல்வர் பழனிசாமி தலைமை உரையாற்றினார். பொருளாளர் புண்ணியமூர்த்தி முன்னாள் மாணவர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் துணைத் தலைவர் ஜமால் ராஜா ஒருங்கிணைத்தார். முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளி கல்லூரி மற்றும் வாழ்க்கை அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

விழாவின் முடிவில் செயலாளர் செல்வராஜ் நன்றி உரையாற்றினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவுகள் வழங்கி விழாக் குழுவினர் சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.