தமிழகத்தில் அமித்ஷா விரும்பியதை செய்ய முடியாது: சிபிஐ முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

0 116
Stalin trichy visit

திருச்சி, ஜன.6  தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என அமித்ஷா கனவு காண்பதை நாம் தடுக்க முடியாது. அவர் விரும்புவது போல் தமிழ்நாட்டில் எதையும் செய்ய முடியாது, ஏனேன்றால் தமிழ்நாடு தனித்துவமான மாநிலம் – திருச்சியில் முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்

சுதந்திர நாடான வெனிசுலா மீது அமெரிக்கா படையெடுத்து அந்நாட்டு அதிபர் மதுரா மற்றும் அவர் மனைவியை கடத்தி கொண்டு சென்றுள்ளார்கள். வெனிசுலா இனி எங்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என டிரம்ப் கூறுவது கண்டிக்கத்தக்கது.

வெனிசுலாவில் தனியார் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு விட்டது அவற்றை தன் வசப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்யம் பார்க்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கையை பிரதமர் கண்டிக்கவில்லை வெளியுறவு துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்க அரசை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய பிரச்சனைக்கு தமிழ்நாடு அரசு தீர்வு கண்டிருப்பது வரவேற்கத்தக்கது அதேபோல பொங்கல் பரிசாக ரூ. 3000 வழங்கப்படும் என அறிவித்திருப்பதும் பாராட்டுகுறியது. நிதி நெருக்கடிக்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகளை வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்.

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள தொழிலாளர் விரோத சட்டம் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி அந்த திட்டத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவதை கண்டித்தும் பிப்ரவரி 12ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறும் அந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் பங்கேற்கும் மேலும் ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தி நினைவு நாளில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தால் மிகப்பெரிய பிரளயம் ஏற்பட போவதாக கூறினார்கள் ஆனால் எந்த பிரளயமும் நடக்கவில்லை நடக்கப் போவதுமில்லை.

புதுக்கோட்டையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்புணர்வோடு பேசவில்லை அவர் பேசிய பேச்சு அநாகரிகமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நேற்று கூட தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமைக்கப்படும் என அமித்ஷா கூறுகிறார் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனித்து ஆட்சி அமைப்போம் என பேசுகிறார் இதிலிருந்து அந்த கூட்டணியின் தன்மையை புரிந்து கொள்ளலாம்.

திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறும் என அதிமுகவும் பாஜகவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள் எங்கள் கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல கொள்கை கூட்டணி இந்த கூட்டணி 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது இந்த கூட்டணி தொடரும் வெற்றி பெறும் திமுக தனித்து ஆட்சி அமைக்கும்.

மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால் தான் நிதி வழங்குவோம் என தமிழிசை கூறிய கருத்து சர்வாதிகாரத்தனமானது மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதரிப்பது தான் இணக்கும் என்றால் அந்த இணக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி தான் கடைப்பிடிப்பார்.
இந்தியா ஜனநாயக நாடு இங்கு அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என அமித்ஷா கனவு காண்கிறார் அவருடைய கனவை நாம் தடுக்க முடியாது தமிழ்நாடு தனித்துவமான மாநிலம் அவர் விரும்பியது போல் எதையும் இங்கு செய்ய முடியாது ஓராயிரம் முறை அமித்ஷா இங்கு வந்து பிரச்சாரம் செய்தாலும் அது ஒருபோதும் எடுபடாது.

அமித்ஷா வெளி மாநிலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் இங்கு வந்தால் தமிழ்நாட்டு மக்களையும் புகழ்ந்து பேசுகிறார் அவரின் இரட்டை நாக்கை மக்கள் பார்த்துக்கொண்டுதான்.

வரும் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் இரண்டாம் இடத்திற்கு யார் வரப்போகிறார்கள் என்பதில் தான் அதிமுகவிற்கும் த.வெ.கவிற்கும் இடையே போட்டி நிலவுகிறது சில இடத்தில் அதிமுகவும் சில இடத்தில் த.வெ.கவும் இரண்டாம் இடத்திற்கு வரலாம்.

பொங்கலுக்கு பணம் கொடுப்பதை நல்ல மனம் இருந்தால் வரவேற்க வேண்டும் இந்த பணத்தின் அருமை ஏழை மக்களுக்கு தான் புரியும்.

நாங்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை சமூகமாக நடத்துவோம் அமித்ஷாவிடம் எடப்பாடி போய் நிற்பது போல் நிற்காமல் சரிசமமாக அமர்ந்து பரஸ்பரம் தொகுதி உடன்பாட்டை பேசி முடிப்போம்.

வரும் தேர்தலில் நான்கு முறை போட்டி தான் தற்போதைய சூழலில் இருக்கும் அமித்ஷாவை எஸ் பி வேலுமணி சென்று தனியாக சந்தித்ததை பார்க்கும்போது அது ஐந்து முனை போட்டியாக மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்றார்

Leave A Reply

Your email address will not be published.