ஆடி காற்றில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டியின் வீடு: எம்.எல்.ஏ. ஆறுதல்

0 262
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கோவண்டாக்குறிச்சியில் ஆடி காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்த மூதாட்டியின் வீடு. ஆறுதல் கூறி உதவிக்கரம் நீட்டிய எம்எல்ஏ  சௌந்தரபாண்டியன்.

புள்ளம்பாடி அருகே கோவண்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீலா என்ற மூதாட்டி. இவர் ஆஸ்பெட்டாஸ் சீட்டு அமைத்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஆடி காற்று பலமாக அடித்ததில் அவருடைய வீட்டின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது. இதனால் வீட்டில் வசிக்க முடியாமல் மூதாட்டி தவித்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் நேரில் சென்று மூதாட்டிக்கு ஆறுதல் கூறி உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் லால்குடி வட்டாட்சியர் விக்னேஷ், கோண்டா குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் வருவாய் ஆய்வாளர் பார்வதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.