அன்பில் பொய்யாமொழி நினைவு நாள்: தி.மு.க.வினருக்கு அழைப்பு

0 213
Stalin trichy visit

திருச்சி, ஆக.28  திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம்  மகனும் , திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி -யின் 26 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு நாளை (ஆக.28 ஆம் தேதி)  காலை 8.30மணி அளவில் மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்படுகின்றது.

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி,ஒன்றிய,நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு  திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், மண்டலத் தலைவருமான மதிவாணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.