மணப்பாறையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

0 156
Stalin trichy visit

திருச்சி, பிப்.3 மணப்பாறையில் பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்து நிலையம் அருகில் உள்ளே பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு  தினத்தை முன்னிட்டு திருவ சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பாக பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர்  ஓபிஎஸ்  ஆணைக்கிணங்க மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் P.V.தாமஸ் தங்கமணி தலைமையில், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது சமயம் மணப்பாறை தொகுதி செயலாளர் B.மாணிக்கம்.Rtd VAO,மணப்பாறை கழக நகரச் செயலாளர் வக்கீல் ரத்தினகுமார், மணப்பாறை மத்திய ஒன்றிய கழக செயலாளர்  பொன் கண்ணன், வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் C.P.ஆறுமுகம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர்  K. பாலசுப்பிரமணியன், , மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட கழக பொருளாளர் திரு ராமசாமி மணப்பாறை ஒன்றிய கழக விவசாய அணி செயலாளர் நீலமேகம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சேகர், மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர் தங்கராஜ், மணப்பாறை நகர அவைத் தலைவர்  வியகுலராஜ், மாவட்ட கழக மகளிரணி செயலாளர்  லீலாவதி,  மாவட்ட கழக இணைச் செயலாளர் ( IT Wing )  V.முத்துக்குமரன் குதிரை கணேசன், கண்ணன், பிரவீன்குமார் IT Wing மற்றும்  நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள், மகளிரணி மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டுடார்கள்.

Leave A Reply

Your email address will not be published.