ஸ்ரீ ராஜகணபதி ஆலய திருவிழாவை முன்னிட்டு அன்னதான விழா

0 167
Stalin trichy visit

திருச்சி கான்வென்ட் ரோடு அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தின் 47 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் விழா இன்று நடைபெற்றது

திருச்சி, பிப். 24 திருச்சி கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி அருள்மிகு முன்னுடையான் அருள்மிகு மாசி சப்பானி கருப்பண்ண சுவாமி அன்னை முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 47 ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஆறாம் தேதி மஞ்சள் காப்பு கட்டி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருபதாம் தேதி அம்பாள் திருத்தேர் திருவிழா புறப்பட்டது. மேலும் அருள்மிகு மாசி சப்பானி கருப்பண்ண சுவாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் திரு தேர் வீதி உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி ஒத்தக்கடை மந்தையில் குட்டி குடி திருவிழா நடைபெற்றது மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதான விழா நேற்று மதியம் ஸ்ரீ ராஜகணபதி ஆலய வளாகத்தில் நடைபெற்றது இந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் மருளாளியும், மேனேஜிங் டிரஸ்டியுமான முனைவர் ஜெயராஜ் அடிகளார் மற்றும் திருக்கோயில் விழா குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.