தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
திருச்சி, ஜூலை 18 திருச்சி,புதுக்கோட்டை, கரூர், வேப்பந்தட்டை, செந்துறை தாலுகா அலுவலகங்களில் நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது
திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர் ராணி மற்றும் போலீசார் திடீரென திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத் திற்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அலுவலகத்தின் முதல் தளத்தில் நில அளவை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு பணியில் இருந்த 4 சர்வேயர்களின் வங்கி கணக்குகள் மற்றும் செல்போன்களை ஆய்வு செய்தபோது அவர்கள் கடந்த 3. மாதங்களில் சுமார் 12 லட் சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவிற்கு ஜிபே மூலம் பரிவர்த் தனை செய்திருந்ததை கண்டுபிடித்தனர். இந்த பணத்தை அவர்கள் எப்படி, யாரிடம் இருந்து வாங்கினார்கள்? என் பது பற்றி தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கணக்கில் வராத ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டது. இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது. கரூர், புதுக்கோட்டை, வேப்பந்தட்டை, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.