மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பெண் நோயாளி தற்கொலை மிரட்டல்
திருச்சி, ஜூலை 18 மோசடி செய்யப்பட்ட பணம்-நகைகளை மீட்டு தரக்கோரி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பெண் நோயாளி தற்கொலை மிரட்டல்
திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
திருச்சி அரசு மருத்துவமனைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, பெரம்ப ரம்ப லூர், அரியலூர், கரூர் உள் பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இதில் பலர் உள்நோயாளிகளாக வும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு பிரிவில் அமைந்துள்ள 120 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி படிக்கட்டின் மீது சரசர வென ஏறி உச்சியில் போய் அமர்ந்து கொண்டார். பின்னர் அவர்மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதைகண்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று, அந்த பெண்ணி டம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அவர் இற்ங்க மறுத்துவிட்டார்.பின் னர் தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணி வாகனத்தின் (ஸ்கைலிட் உதவியுடன் அந்த பெண் அமர்ந்து இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குசென்று அவர் அருகில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் அந்த பெண்ணுக்கு தண்ணீரை கொடுத்து பாதுகாப்பாக கீழே இறக்கினர்.