ஆழ்வார்தோப்பு பகுதியில் சமூகவிரோதிகள் அட்டகாசம் : காவல்துணை ஆணையரிடம் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மனு

0 494
Stalin trichy visit

திருச்சி, மே 28 திருச்சி மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி,29 வது வார்டுக்குட்பட்ட 45 வது பீட் காவல் நிலையம் பகுதி நேரமாக செயல்படுவதால் சமூக விரோதிகள் ஆழ்வார் தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் குடித்து , குடிபோதையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் SDPI கட்சி, ஆழ்வார் தோப்பு கிளை நிர்வாகிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

உடனடியாக SDPI கட்சி நிர்வாகிகள் 45வது காவல் உதவி மையம் முழுநேரம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை கிளை செயலாளர் இரும்புக்கடை முஸ்தபா  தலைமையில் காவல்  துணை ஆணையர் விவேகானந்தா சுக்லாவிடம்    மனு அளித்தனர்.

உடன் மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.S.பக்ருதீன்,வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் I. சபியுல்லா, தொண்டரணி மாவட்ட தலைவர் ஆரீப்.

Leave A Reply

Your email address will not be published.