வாலிபர் மீது தாக்குதல் : 3 பேர் கைது
திருச்சி அக்.24 திருச்சி இ.பி ரோடு கல்மந்தை காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 27. இவர் பால் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வாழைக்காய் மண்டி அருகே கடைக்கு சென்றார். அப்போது அங்கு நின்ற நான்கு வாலிபர்கள் இவரது வீட்டை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. உடனே மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் கல்லாலும், கையாலும் அடித்து தாக்கினர். இதில் காயமடைந்த மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், காந்தி மார்க்கெட் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு இவரை தாக்கிய ஸ்டீபன், அரவிந்த், அருண்குமார், அஜித்குமார் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினார். இதில் ஸ்டீபன், அரவிந்த், அருண்குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.