தபால் ஊழியர்களை தாக்கியவர் கைது
திருச்சி அக்.24 திருச்சி தில்லை நகரில் தபால் அலுவலகம் உள்ளது.தபால் அலுவலகத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை தில்லை நகர் தூக்கு மேடை தெருவை சேர்ந்த முனியாண்டி (வயது 20 )என்ற வாலிபர் தள்ளிவிட்டு உள்ளார். இதை தபால் அலுவலக ஊழியர்கள் தட்டிக் கேட்டுள்ளனர்.அப்போது ஆத்திரமடைந்த முனியாண்டி தபால் அலுவலக ஊழியர்களை தாக்கி, தபால் அலுவலகத்தின் கதவு ஜன்னல் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
உடனே இதுகுறித்து திருச்சி தபால் நிலைய அதிகாரி லட்சுமி பாய் (வயது 50). தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து ஊழியர்களை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து ,அலுவலக கதவு, சன்னலை சேதப்படுத்திய முனியாண்டியை கைது செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.