ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு : ரவுடியை தேடும் காவல்துறையினர்

0 81
Stalin trichy visit

திருச்சி, பிப்.3  திருச்சி பீமநகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரத்தினம்(63). மன்னார்புரம் குடிசை பகுதி முருகன் கோயில் அருகில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே இடத்தில் ஆட்டோ ஓட்டி வருபவர் ராஜேஷ் கண்ணா (எ)புரோட்டா ராஜேஷ் இருவருக்கும் மன்னார்புரம் குடிசை பகுதி முருகன் கோயில் அருகில், ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இதில் ராஜேஷ் கண்ணா என்பவர் கையில் வைத்திருந்த அரிவாளால் ரத்தினத்தை தாக்கியதில் இடது பக்கம் கன்னத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலின் பெயரில்  கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். வெட்டுபட்ட ரத்தினத்தின் தந்தை ஆனந்த் குமார் காவலர் உதவி ஆணையர் பழனிசாமியிடம் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

புரோட்டா ராஜேஷ் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கஞ்சா அப்பகுதியில் புழக்கத்திற்கும் ராஜேஷ்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது

Leave A Reply

Your email address will not be published.