தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிபிஎம்எல் AICCTU சார்பாக ஆட்டோ பேரணி

0 368
Stalin trichy visit

திருச்சி, மே 2  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மே – 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) மற்றும் அகில இந்திய மைய கவுன்சில்
AICCTU சார்பாக   CPI(ML) நகர செயலாளர் பி.பாலு தலைமையில் AlCCTU ஆட்டோ சங்க செயலாளர்கள் ஆர்.கமல், கே. அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் ஆட்டோ மற்றும்
இருசக்கர வாகன பேரணி பெரியார்சிலையில் தொடங்கி ராஜவீதி வழியாக சென்று காமராஜர்சிலை வழியாகவந்து பெரியார் சிலையில் முடிவடைந்தது. இறுதியாக பெரியார் சிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மே- தினம் நிகழ்வுபற்றி  AlCCTU மாநிலகுழு உறுப்பினர்  P.இராஜேந்திரன், CPI(ML) மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S.ராஜ்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்.
நிகழ்வில் மாவட்டகுழு உறுப்பினர்கள் மெக்கானிக் S.இளையராஜா, M.தங்கராஜ்,
R. ராமாயி, மற்றும் நகரகுழு உறுப்பினர்கள் K.கோகுல், ஷாகின்ஷா, ஜோதிபாசு,
பாலகுமரன், AlCCTU நிர்வாகிகள் அருள்ராஜ், முருகானந்தம், கிருஷ்ணன், மற்றும் தோழர்கள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.