திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது
திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் துறையூர் பகுதிகளில் கோயில்கள் மற்றும் வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியை சேர்ந்த தமிழ் பாரதி (22) ,திருச்சியை சேர்ந்த சரவணன் (44) ஆகிய இருவர் கைது. இருவரிடமிருந்து 9 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் மீட்பு – திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரு பைக் பறிமுதல் .
முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் ,போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை.
கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பாரதி மீது அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பு.