அரசுக்கல்லூரியில் குடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு

0 241
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24  மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் (YRC) சார்பாக குடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பண்ணா கொம்பு அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் (YRC) சார்பாக குடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வானது நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளஞ் செஞ்சிலுவைச் சங்கத்தின் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர், தந்தை பெரியார் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆர்.குணசேகரன் உடல் நலம் குறித்தும்,உணவு முறைகள் பற்றியும், இரத்த தானம் முகாமின் பயன்பாட்டினையும்,இரத்த தானத்தின் முக்கியத்துவத்தினையும்,பிளாஸ்டிக் பொருட்களின் அவலங்களையும், ஒரு மாணவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் உரைநிகழ்தினார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் க. மலர்மதி அம்மா  தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்.  சிறப்பு விருந்தினராக ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவர் எம்.எஸ்.விஜய ஆனந்த்  குடல் ஆரோக்கியம் குறித்தும்,உணவின் தேவை,உணவு உட்கொள்ளும் முறை தவறும் பட்சத்தில் அவற்றால் ஏற்படும் நோயின் அறிகுறிகள் குறித்தும்,விரத முறையின் நன்மைகள் மற்றும் எவ்வாறு அவற்றை பின்பற்ற வேண்டும் என்கிற முறையினையும் மருத்துவர் எடுத்துரைத்தார். மேலும் மாணவர்களிடம் தங்களது ஐயங்களை வினவி வினாவிற்கான விடைளித்தார்.

கல்லூரியின் இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு .நதியா  வரவேற்புரையாற்றினார். .தமிழ்த் துறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் திலீப் குமார் மற்றும் பூஜாஸ்ரீ  ஆகியோர் நிகழ்ச்சியைதொகுத்து வழங்கினார்கள்.  நிறைவாக  கார்த்திகா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.