இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் த.வெ.க. நிர்வாகிகள்
திருச்சி, மார்ச் 24 திருச்சி மாவட்டம் லால்குடி சமுதாய கூடத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் பங்கேற்றனர். மத நல்லிணக்கத்தையும் சமுதாய மாண்பையும் போற்றும் வகையில் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக இலால்குடி சமுதாய கூடத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாவட்டக் கழகச் செயலாளர் திருச்சி M.S.விக்னேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் மாவட்ட இணைச் செயலாளர் மாசோ, செயற்குழு உறுப்பினர்கள் இம்மானுவேல், கார்த்திக், பாலா புள்ளம்பாடி சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லால்குடி தெற்கு ஒன்றியம் சந்தோஷ், கிழக்கு ஒன்றியம் செல்வம், வடக்கு ஒன்றியம் பிரபு, கார்த்திக், மத்திய ஒன்றியம் ராஜா லால்குடி வடக்கு நகரம் மணிவண்ணன், தெற்கு நகரம் விக்னேஷ், புள்ளம்பாடி கணேஷ், சரவணன் மற்றும் இளைஞரணி விஜய், தொண்டரணி ஆனந்த், தகவல் தொழில்நுட்ப அணி சூர்யா,விவசாயி அணி உதயா, தொழிற்சங்க அணி நிஷாந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.